திருவண்ணாமலை புரட்டாசி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மலையே மகேசன்’ எனப் போற்றி வணங்கப்படும் திருவண்ணாமலையில் உள்ள மகாதீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி வரும் செவ்வாய்கிழமை (செப்.17) காலை 11.27 மணிக்கு தொடங்கி, மறுநாள் புதன்கிழமை (செப்.18) காலை 9.10 மணிக்கு நிறைவு பெறுகிறது. மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பெளர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்

நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நிழற்பந்தல்கள், குடிநீர், நீர் மோர் பந்தல் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 9 மணி வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.இதன்பிறகு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. மாலை 3 மணிக்குப் பிறகு மீண்டும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. […]

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் – கிரிவலமும் சென்றனர்

மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவிலில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் காலை முதல் மதியம் வரை பல்வேறு வண்ண மலர்களால் சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் கூட்டம் அதிகரித்ததால் நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் […]

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் (2ம்தேதி) இரவு 7.45 மணிக்கு தொடங்கி, 3ம்தேதி மாலை 5.48 மணிக்கு நிறைவடைகிறது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பவுர்ணமி குரு பவுர்ணமி என அழைக்கப்படுகிறது. எனவே, வழக்கத்தைவிட அதிகளவு பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வழக்கத்தைவிட கூடுதலான சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பவுர்ணமியில் இருந்து முதன்முறையாக சிறப்பு ரயில்கள் இயக்க […]