திண்டுக்கல்லில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற வாலிபருக்கு துப்பாக்கி சூடு
திண்டுக்கல்லில் வாலிபர் இர்பான் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது தனிப்படை போலீசார் முழங்காலில் சுட்டு பிடித்தனர். படுகாயம் அடைந்த வாலிபர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி தாக்கியதில் காவலர் அருண் என்பவர் படுகாயம்
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் அடுத்த மாதம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டலம் 26 வது வார்டு பகுதியில் நடைபெற்ற அரசு காப்பீட்டு அட்டை பதிவு செய்தல் சிறப்பு முகாமில் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டபட்டு அடுத்த மாதம் திறக்கபடும் என சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தெரிவித்தார். சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு கழக திமுக சார்பில் அரசு காப்பீட்டு அட்டை பதிவு செய்தல் சிறப்பு முகாம், பல்லாவரம் […]
அரசு மருத்துவமனையில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இன்று (24.07.2023) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகளின் பிரிவினைப் பார்வையிட்டு, நோயாளிகளிடம் நலம் விசாரித்து, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தேசிய நல வாழ்வு குழுமத் திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர். அழகுமீனா, அவர்கள் உட்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இன்று (24.07.2023) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு குழந்தைகள் நலப் பிரிவு கட்டடப் பணிகளையும், கட்டடத்திற்கான வரைபடத்தினையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, தேசிய நல வாழ்வு குழுமத் திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர். அழகுமீனா, உட்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.