ரேஷன் கடைகளில் 2 கிலோ 5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை

தமிழ் நாட்டிலுள்ள நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 63 லட்சம் கிடைத்துள்ளது. இந்த சிலிண்டர் வாங்குவதற்கு முகவரி சான்றிதழ் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விற்பனையை தமிழ்நாட்டில் அனைத்து கடைகளுக்கும் பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

பாதாள சாக்கடையில் சிக்கிய எரிவாயு லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு

பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை பம்மலில் எரிவாயு ஏற்றிசென்ற லாரி பாதளசாக்கடை தோண்டப்பட்டு சரியாக மூடாதசாலையில் சிக்கி சாய்ததால் போக்குவரத்து பாதிப்பு, கிரேன், ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்டு வருகிறார்கள். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை உள்ளது நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை ஏற்கனவே குறுகலாகவும் வளைவு, நெளிவுகள் அதிகமான சாலை, இதற்காக விரிவாக திட்டமிட்ட அதன்பணிகளும் நடைபெறாமல் உள்ளது.இந்த நிலையில் […]