டெல்லியில் நடைபெறும் G20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர ஜி20 உறுப்பினராக்க இந்தியா முன்வந்துள்ளது; அனைத்து உறுப்பினர்களும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்”

ஜி 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க யூனியன்

பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி 20 மாநாட்டில் அறிவிப்பு. ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டதால் ஜி 20 அமைப்பு ஜி 21 அமைப்பாக மாறுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி ஜனாதிபதி சிறப்பு விருந்து அளிக்கிறார்.

ஜி-20 மாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களை பிரதமர் வரவேற்றார்

நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். மொரீஷியஸ் பிரதமரை வரவேற்று மோடி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,“எனது நண்பர் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்தை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். இன்று எங்கள் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார். சர்வதேச நிதியத்தின் மேலாண்மை இயக்குநரை வரவேற்று, பிரதமர் கூறியிருப்பதாவது,“கிறிஸ்டாலினா ஜார்ஜீவா கூறியிருப்பதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது காலத்தின் நெருக்கடியான சவால்களைத் தணித்து, நமது இளைஞர்களுக்கு ஒரு […]

இந்தியாவில் கடந்த நிதியாண்டில் நடந்த டிஜிட்டல் பரிமாற்றம், இந்தியாவின் ஜிடிபியில் 50 சதவீதம் என உலக வங்கி கூறியுள்ளது

ஜி20 கொள்கை குறித்த ஆவணத்தை உலக வங்கி தயாரித்துள்ளது. அதில் இந்தியா குறித்து கூறப்பட்டுள்ளதாவது: பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிதிச் சேவைகள் அணுகுவதை உறுதி செய்யப்படுவது என்பது, ஜன்தன் வங்கிக்கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் போன்கள் இல்லாமல் போயிருந்தால் 47 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இந்தியா இதனை 6 ஆண்டுகளில் செய்து சாதனை நிகழ்த்தி உள்ளது. பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது, போது, 2015 மார்ச்சில்14.72 கோடி வங்கிக்கணக்குகள் […]

ஜி20 விருந்தினர்களுக்கு தங்கம், வெள்ளி பாத்திரங்களில் உணவு

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களுக்கு தங்கம், வெள்ளிகளால் ஆன பாத்திரங்களால் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடு – டெல்லியில் விடுமுறை

டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு செப். 8 முதல் செப். 10 வரை விடுமுறை அறிவிப்பு. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.

ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்றே குறிப்பிடப்படும் : ஜெய்ராம் ரமேஷ்

ஜி 20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் ‘பாரத ஜனாதிபதி’ என்று ராஷ்டிரபதி பவன் குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்றே குறிப்பிடப்படும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.