3 நாட்களுக்கு இலவச டேட்டா

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், Validity நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB மொபைல் டேட்டா, Unlimited Calls, 100 SMS இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பு. Postpaid வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு.

300 யூனிட் இலவச மின்சாரம்

பிரதமரின் சூரிய வீடுகள் இலவச மின்சார திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு மாதம் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்; இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளில் வசிப்போர் பயன்பெறுவர் -நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்-ஐ, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் பெறலாம் எனவும் அறிவிப்பு. இந்த டிக்கெட் விலை ₹150 என நிர்ணயம்.