புலி பிடிக்கும் கூண்டில் வனத்துறை ஊழியர்களை சிறை வைத்த கிராமம்
கர்நாடக மாநிலம் பொம்மனகுண்டு என்ற இடத்தில் காட்டுக்குள் புலி வந்ததாக கிராமவாசிகள் கண்டுபிடித்தனர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள் ஆனால் அவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது இதனால் வனத்துறை ஊழியர்களை அவர்கள் கொண்டு வந்த புலி பிடிக்கும் கூண்டுக்குள் அடைத்து வைத்தார்கள். பல மணி நேரம் பேச்சு நடத்திய பிறகு அவர்களை வெளியே விட்டனர்
இந்திய வனப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்ற 147 பேரில் 101 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள்

சென்னை: மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022-ம் ஆண்டுக்கான இந்திய வனப் பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் நாடு முழுவதுமிருந்து 147 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 101 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள். இதுதவிர முதல் 10 இடங்களில் 8 இடங்களை சங்கர் ஐஏஎஸ் மாணவர்களே கைப்பற்றியுள்ளனர். இவர்கள் சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் கிளைகளில் பயின்றவர்கள். இதன்படி அகில இந்திய அளவில் கொல்லுரு வெங்கட ஸ்ரீகாந்த் முதல் இடத்தை […]