சுபமுகூர்த்த தினம் மற்றும் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை தொடர்ந்து உயர்வில் உள்ளது
மல்லிகை சில்லறை விலையில் கிலோ ₹800 ஆகவும், பிச்சி கிலோ ₹1200க்கும் விற்பனை
பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் பிறந்த நாள் விழா

தமிழ்வளர்ச்சி துறை சார்பில் தனித்தமிழ் இயக்க தந்தை மறைமலை அடிகளாரின் 148 வது பிறந்தநாள் விழா, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மறியாதை செய்தார் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 148வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் மறைமலை அடிகல் தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற […]
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளான இன்று (15.07.24)

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்துக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான புரட்சி தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
உதகை மலர் கண்காட்சி – ரூ.150 கட்டணம் நிர்ணயம்

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் 20ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மலர் கண்காட்சியில் சிறியவர்களுக்கு (6-12 வயது) ரூ.75, பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம். இந்தாண்டு மலர் கண்காட்சியில் 6.5 லட்சம் மலர்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன – நீலகிரி ஆட்சியர்.
பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு!

பக்தர்களுக்கு தட்டுப்பாடு? கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் தாமரை பூ பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தோவாளை மலர் சந்தையில் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 1 தாமரை பூ ரூ.1க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவராத்திரி கொலு வைத்து இருப்பவர்கள் பூக்கள் வாங்க முடியாமல் தட்டுபாடு ஏற்படும்!
ஓணம் பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது

விலையை கட்டுப்படுத்த தான் ஆட்கள் இல்லை என பொதுமக்கள் புலம்பல்! நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாடப் படுவதையொட்டி குமரி மாவட்டம் தோவாளையில் இரண்டு நாட்கள் சிறப்பு மலர் சந்தை நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 700 டன் பூக்கள் இந்த சந்தைக்கு வந்துள்ளது. ஓணத்தின் சிறப்பு அம்சமான அத்தப்பூ கோலங்களுக்கு தேவையான வாடாமல்லி, கேந்தி,சம்பங்கி, ரோஜா, தாமரை,மரிக்கொழுந்து, செவ்வந்தி என அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு உயார்வு. கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பூ […]