திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மே 17ம் தேதி கோடை விழா மற்றும் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி துவங்கியது

கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 10 உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல ஆயிரம் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை 360 டிகிரியில் சுழன்று வீடியோ எடுக்க புதிய கருவி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 தினங்களில் 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் பிரயண்ட் பூங்காவிற்கு வந்து சென்றுள்ளனர்.இதன்மூலம் நுழைவு கட்டணமாக ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சாரல் மழை பெய்து […]