செம்பாக்கத்தில் வெள்ள மீட்பு பணிக்கு எந்திரங்கள் தயார்

தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலம், செம்பாக்கம், காமராஜபுரம், சிட்லப்பாக்கம், திருமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மீட்பு பணிகளுகாக உபகரணங்களாக மரம் வெட்டும் இயந்திரங்கள், நீர் இறைக்கும் மோட்டார், மணல் மூட்டைகள், ஜே.சி.பி இயந்திரங்கள், லாரிகள், டார்ச் லைட், குடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயார் படுத்தப்பட்ட நிலையில் மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தயாரக இயக்கி பார்த்தனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் சோலனில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் பலி

இமாச்சலப் பிரதேச மாநிலம் சோலனில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளார். சோலன் மாவட்டம் ஜடோன் கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுனாமி போல் தாக்கும் வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட கார்கள், மக்கள் – கொத்து கொத்தாக சடலங்கள்

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கர் பகுதியில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்தது. ▪️இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் குலு நகருக்கு அருகே ஒரு தற்காலிக வீடு சேதமடைந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். சம்பாவின் கட்டியான் தெஹ்சில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிருடன் புதைந்து உயிரிழந்தார். […]