₹6000 நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க அனுமதி

வெள்ள நிவாரணம் உடனடி தேவை. அதை தாமதப்படுத்த முடியாது. தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம். நிவாரண தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
3 மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு

வெள்ளம் பாதித்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மத்தியகுழு ஆய்வு.
சென்னை மூர்மார்க்கெட்டில் பகுதியில் மழை காரணமாக வெள்ள நீர் புகுந்ததால், சேதமடைந்த துணிகளை யானை கவுனி பகுதியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தில், உலர வைக்கின்றனர்
தாம்பரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கிய டி. ஆர். பாலு எம்பி

தாம்பரம் தொகுதியில் கன்னடபாளையம், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார்நகர், சசிவரதன் நகர் ஆகிய பகுதிகளில் புயல் மழையால் பாதிப்பு அடைந்த 2800 குடும்பங்களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் அரிசி, மளிகை தொகுப்பு, காய்கறிகள், ரொட்டி, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு:- தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் 5060 கோடி அனுப்ப வேண்டும் என கடிதம் மூலம் கேட்டு கொண்ட […]
வெள்ளத்தில் மிதக்கும் வரதராஜபுரத்தில் 6 வீடுகளில் அறுபது பவுன் கொள்ளை

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் ராஜிவ் நகரில் விஷ்ணு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி கீழ் தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என 17 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பலர் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி தங்கள் தெரிந்தவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று சரத்குமார் என்பவர் தன் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிச்சி அடைந்து உள்ள சென்று பார்த்த போதும் பீரோ உடைக்கப்பட்டு […]
புயலில் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

புயல் மழையால் பாதிக்கப்பட்ட கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் இருளர் குடியிப்பு, கலைஞர் நகரை சேர்ந்த தூய்மை பணியார் என 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புதுப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் ஆறுமுகம் ஏற்பாட்டில் திருப்போரூர் ஒன்றியகுழு தலைவர் எல்.இதயவர்மன் அரிசி, மளிகை பொருட்கள், பிஸ்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
சென்னை வெள்ளம் ரேஷன் கார்டுக்கு ரூபாய் 6000 வழங்க ஸ்டாலின் உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, […]
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு

நேற்று 50 வாகனங்களும், இன்று முதல் 150 வாகனங்களும் இயக்கப்படும். அரை கிலோ காய்கறி 20 ரூபாய் திட்டம் – தமிழக அரசு தொடங்கியுள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்படும். தோட்டக்கலை துறையின் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்படும். மலிவு விலையில் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளன. நேரடியாக வீடுகளுக்கு வந்து இவர்கள் காய்கறிகளை விற்பனை செய்வார்கள்.
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை பள்ளிக்கரணையில் வெள்ளம் ஏற்பட்டது

15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய அருண் என்ற இளைஞர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். 3 நாட்களுக்கு பிறகு வெள்ளநீரில் மிதந்த சடலத்தை பார்த்து பெற்றோர் கதறினர்.
வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி மட்டுமின்றி, சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கும் மத்திய அரசு ரூ.561 கோடி நிதி வழங்கியுள்ளது;
தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும்; புயல், மழை பாதிப்பில் இருந்து தமிழ்நாடு மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்- மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்