ரயில் பயணிகள் மீட்பு பணி துவங்கியது

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 4 பேரும் தற்போது முதலுதவி சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குரோம்பேட்டை காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் அரசு நிவாண பணம் 6 ஆயிரத்தை பாதிக்கப்பட்வர்கள் பெற்றுசென்றனர்

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட குரோம்பேட்டை ராதநகர், சாந்திகாலணி, காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் புயல் வெள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்களின் உடமைகளும் சேதமடைந்தது, இந்த நிலையில் குரோம்பேட்டை காந்திநகரில் நியாவிலைக்கடையில் நிவாரணம் வழங்கப்படும் நிலையில் ஆண்கள் பெண்கள் என வரிசையில் நின்று அரசு நிவாரண உதவி தொகை 6 ஆயிரத்தை பெற்றுச்சென்றனர்….
மீண்டும் வாக்குச்சீட்டு முறை ஜவாஹிருல்லா வற்புறுத்தல்

புயல் வெள்ளதால் பாதிக்கட்ட தாம்பரம் மாநகராட்சி சசிவரதன் நகரில் 1000 குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அரிசி, மளிகை பொருள்கள் தொகுப்பு, போர்வை உள்ளிட்ட நிவரண பொருட்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் வழங்கினார்கள், மாவட்ட தலைவர் ஜாகீர்உஷேன், பொருளாளர் இஸ்மாயில், வழங்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹில்லாஹ் :- புதிய நாடாளுமன்ற கட்டிடம் மோடியின் பெருமைகாக கட்டப்பட்டது. […]
மழை நிவாரணம்: அருக ஊழியர் குடும்ப பெண்கள் மறியல்

தாம்பரம் அருகே நிவாரண தொகை வழங்க கோரி அரசு ஊழியர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு எம்.எல்.ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கபடடவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கபடும் என்று முதலமைச்சர் அறிவித்ததை நேற்று முதல் சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவடங்களில் நேற்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிவாரண தொகையை […]
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு பெருமாள் நகர் பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி பொதுமக்களுக்கு தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் உணவு வழங்கினார்

இப்பணியில் பம்மல் வடக்கு பகுதி செயலாளர் தா.ஜெயக்குமார், அருள்பெரும் ஜோதி பரமதயாளன் மற்றும் திமுக உறுப்பினர்கள் சந்திரன், ஸ்ரீதர், பாலாஜி, பாபுஜி, தனசேகர், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
ரூ 6000 டோக்கன் விநியோகம்

குரோம்பேட்டை 38வது வார்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை ரூபாய் 6000 வழங்குவதற்கான டோக்கன் ரேஷன் கடைஊழியர்களால் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் பயனாளிகளுக்கு வழங்கி பார்வையிட்ட போது எடுத்த படம் அருகில் சி.ஆர்.மதுரைவீரன், சந்திரசேகர்.
தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளத்தின் அடித்தளம்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும்
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுங்கு வெள்ள எச்சரிக்கை
கிழக்குத் தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி புயல் நிவாரண உதவி

மனிதமக்கள் கட்சி சார்பில் கிழக்கு தாம்பரம் லட்சு புறத்தில் 300 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் வழங்கினார். புயல் வெள்ளதால் பாதிக்கட்ட கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலை லட்சுபுரம் பகுதியை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரிசி, மளிகை பொருள்கள் தொகுப்பு, போர்வை உள்ளிட்ட நிவரண பொருட்களை மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் வழங்கினார். மாவட்ட […]
தாம்பரத்தில் அதிமுக வெள்ள நிவாரண உதவி

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதியில் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் சமத்துவபெரியார் நகர், சசிவரதன நகர் உள்ளிட்ட வெள்ளம் சூழப்பட்ட பகுதியில் மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, பெருங்களத்தூர் பகுதி செயலாளர் சீனுபாபு, மாமன்ற உறுப்பினர் சாந்தி புருஷோதமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்து நிராவணம் வழங்கனர்கள்…