தென் மாவட்டங்களுக்கான வெள்ள நிவாரணத்தை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் தென்காசி, கன்னியாகுமரியில் பாதிப்புகளின் அடிப்படையில் நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகை ரூ10,000 ஆக உயர்வு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அந்தோணியார்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது

வரலாறு காணாத மழையால் பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடுமுறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்துள்ளனர். அதிகாரிகள் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை தொடங்கவும் உத்தரவு அளித்துள்ளது. இந்தநிலையில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமனம் செய்துள்ளனர். பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடுமுறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மின்சாரம், குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை […]

வெள்ளத்தில் சிக்கிய 400 பக்தர்கள் மீட்பு

திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு திருச்செந்தூர் கோயிலில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லை அழைத்து வரப்பட்ட பக்தர்கள் நெல்லையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பக்தர்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன

மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன-கார்த்திகேயன், நெல்லை ஆட்சியர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பு

தூத்துக்குடி ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பு. 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை காவல்துறை, தீயணைப்பு மீட்புத்துறை பத்திரமாக மீட்டது.

வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது

மதுரை: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பில் இருந்து ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி அனுசியா மயில் (வயது 27) என்பவருக்கு இன்று(டிச.,20) ஆண் குழந்தை பிறந்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் பெருமாள் மனைவி அனுசியா மயில். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இரண்டாவது முறையாக நிறைமாத கர்ப்பமாக உள்ளார். ஸ்ரீவைகுண்டம் காவலர் குடியிருப்புக்கு தாய் சேதுலட்சுமியுடன் வந்த போது நால்வரும் வெள்ளத்தில் சிக்கினர். இதையடுத்து சூலூரில் […]

தென்மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் குழுவினர் வருகை

தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் மதுரை வந்தனர். கார் மூலம் புறப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளனர்.