வெள்ள நிவாரண தொகையை ஏரி புனரமைப்புக்கு தந்த வழக்கறிஞர்
குரோம்பேட்டை பாரதிபுரம் சம்மந்தம் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் ராமதாஸ். இவருக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 6000 வழங்கப்பட்டது. அவர் அதனை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரி புனரமைப்புக்கு வழங்குவதாக அறிவித்தார். இதற்கான காசோலையை அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தூத்துக்குடிக்கு அனுப்ப பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்தில் குவிந்த நிவாரண பொருட்கள்

தூத்துகுடி மாவட்டம் காலங்கரை பகுதி அதித கனமழையால் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பீர்க்கன்காரணை காவல் ஆய்வாளர் நெடுமாறன் தலைமையில் பல்வேறு தன் ஆர்வலர்களிடம் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள 600 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, ரவா, கோதுமை மாவு, ரொட்டி, பிஸ்கட், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை குவித்தன. அதனை காவல் துறையினர் லாரியில் ஏற்றி தூத்துகுடி மாவட்டம் காலங்கரை கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சிட்லபாக்கத்தில், கோமதி நகர், அம்பேத்கர் நகர், SBI காலனி, திருமுருகன் சாலை, ராமகிருஷ்ணாபுரம், ஆகிய நியாய விலைக் கடைகளில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.6000/- வழங்கப்பட்டு வருவதையும், நிவாரண உதவித் தொகை கிடைக்காதவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

உடன் மாமன்ற உறுப்பினர்கள் சி.ஜெகன், சி.சுரேஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மழை வெள்ளத்தை முன்பே உணர்த்திய அதிசய பூச்சிகள்

நெல்லை, தூத்துக்குடியில் பெரும் வெள்ளம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டின் மொட்டை மாடியில் உயரமான சுவர்களில் ஒரு வித பூச்சிகள் வந்தன.இப்பூச்சிகளின் வருகையால் திகைத்துப்போனவர்கள் இதனை விரட்ட படாதபாடு பட்டும் பயனில்லை! ஊர்ந்தும், பறந்தும் சுவர்களின் விளிம்புகளில் புகலிடம் தேடிக்கொண்டன! இரண்டு நாட்களுக்குப் பிறகு … இப்பூச்சிகளில் எந்த அளவு உயரத்தில் இருந்ததோ, அதன் உயரத்திற்கு ஓரடி கீழே மழைநீர் வந்தது! நெல்லை, தூத்துக்குடியில் வழக்கத்திற்கு மாறாக வானிலை கணிப்புகளைக் கடந்தும் கனமழை பெய்யுமென்றும், பெரும் […]
முதலில் பேரிடர் இல்லை என சொன்னார்கள், தற்போது பேரிடர் பாதிப்பை பார்வையிட வருகிறார். வந்து பாதிப்புகளை பார்த்துவிட்டு தகுந்த நிதியினை வழங்க வேண்டும்

பெருவெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய நிதியமைச்சர் தூத்துக்குடி வருவது குறுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து
மழை வெள்ளம் பாதிப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

மழை வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்த மத்திய அரசு குழு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு மத்திய அரசு குழுவின் பாராட்டை பிரதமரை சந்தித்தபோது தமிழ்நாடு முதல்வர் எடுத்துக்கூறி இருந்தார்
தூத்துக்குடி வெள்ளத்தில் மாட்டுத் தொழுவம் மூழ்கியதால், மாடுகளை பத்திரமாக மீட்டு தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கட்டிவைத்து பாதுகாத்து வரும் உரிமையாளர்கள்
ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் கனமழையால் பரிதாபம் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலி
தூத்துக்குடி : “வெள்ளம் பாதித்த பகுதிகளில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.. மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்”

-ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர்
800 குடும்பங்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களாக வெள்ளத்தில் அவதிப்படுகிறார்கள். உதவி கேட்டு மக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் கேம்லாபாத், ஆறாம்பண்ணை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் அரசு உதவிக்கரம் நீட்ட வலியுறுத்தும் வருகின்றனர்.