காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும்
குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதாக வழக்கு
ஐகோர்ட்டில், சமூக ஆர்வலர் டேவிட் மனோகர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “குரோம்பேட்டை, பல்லாவ ரம், ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் மழைக்காலங்களில் கடுமை யான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதற்கு சாலையோர கால் வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததும், குப்பைகளை கொட்டுவதை தடுக்காததும்தான் முக்கிய காரணம். பெரும்பா லான இடங்களில் மழைநீர் வடிகால் வசதியும் இல்லை. பல்லாவரம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு எதிரே செல்லும் ஏ கால்வாய், தாம்பரம் அரசு […]
பெங்களூருவில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த 100 மி.மீ கனமழை:
பெங்களூருவில் நேற்று (ஞாயிறு) இரவு முதல் இன்று (திங்கள்) காலைக்குள் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது .வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு நகரில் 105.5 மிமீ மழை பெய்துள்ளது. ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் 78.3 மிமீ மழையும், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 105.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
நேபாள பெருவெள்ளம் – 170-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ▪️. நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது. ▪️. கனமழையால் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன 42 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல்
சற்று முன் அதிர்ச்சி தகவல்

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் நெல்லையை சேர்ந்த அஸ்வின் ( வயது 17) உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு
புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும். குடும்ப அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது.
“வெள்ள நிவாரண நிதி வழங்குவது எப்போது?”

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குவது எப்போது? எவ்வளவு வழங்கப்படும்? மக்களவையில் திமுக எம்பி ஆ.ராசா கேள்வி
தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு:

பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
சென்னையில் வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்!

மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில் சென்னை மாவட்டத்தில் வரும் வாரங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!
வெள்ள நிவாரண தொகையை ஏரி புனரமைப்புக்கு தந்த வழக்கறிஞர்
குரோம்பேட்டை பாரதிபுரம் சம்மந்தம் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் ராமதாஸ். இவருக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 6000 வழங்கப்பட்டது. அவர் அதனை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரி புனரமைப்புக்கு வழங்குவதாக அறிவித்தார். இதற்கான காசோலையை அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.