சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதம்

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து தோகா, துபாய், சார்ஜா, அந்தமான் புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. துபாய், சார்ஜா, துருக்கி நாடுகளில் இருந்து வந்த 3 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூரு சென்றது.
விண்ணை முட்டும் விமான கட்டணம்!

வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம் என 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து கொச்சி, திருவனந்தபுரம் செல்வதற்கான விமான கட்டணம் ரூ.14,000 ஆக உயர்வு மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணமும் அதிகரிப்பு