தாம்பரம் விமானப்படை ஆண்டு விழாவில் விமானிகள் சாகசம்

சென்னை அடுத்த தாம்பரம் விமான படை பயிற்சி மையத்தில் உள்ள விமானிகள் பயிற்றுநர் பள்ளியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரண்டு நாட்கள் அதன் நிறைவிழா கொண்டாடபட்டது. விமான படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இதில் 9000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து சாகசம், தேசிய கொடி மூவர்ண வடிவில் பாராசூட் இயக்குவது, பாராக்லிடிங், தாழ்வாக போர் விமானம் இயக்குவது, உள்ளிட்ட பல்வேறு வான் சாகசங்களை […]

அக்டோபர் 14ம் தேதி வரை இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே மோதல் நிலவும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து!

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாததால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதம்

ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதமானது. விமானம் புறப்படத் தயாரானபோது விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு ஆளுநர் சென்ற இண்டிகோ விமானம் கோவைக்கு புறப்பட்டது.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம்: 10 பேர் பலி

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.கோலாலம்பூர், மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் இரு விமானிகள் உள்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால் அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானி முயன்றார். அதன்படி சிலாங்கூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முயற்சி […]