விமான விபத்து: டி.என்.ஏ மூலம் 99 உடல் அடையாளம் கண்டுபிடிப்பு
குஜராத்விமான விபத்தில் இறந்தவர்களுடைய உடல்நிலை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது இது குறித்து டாக்டர் ரஜ்னிஷ் படேல் கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 99 உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 87 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. இதில் 64 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
குஜராத் விமான விபத்தை பார்வையிட்ட மோடி
நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த குஜராத் விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது..விபத்து நடந்த இடத்தை மத்திய மந்திரி அமித்ஷா நேற்று பார்வையிட்ட இன்று காலையில் எட்டு மணிக்கு பிரதமர் மோடி தனி மூர்த்தியில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்
டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்
ராஜஸ்தான் பன்ஸ்வாராவைச் சேர்ந்த டாக்டர் கோனி வியாஸ், தனது கணவர் பிரதீப் ஜோஷி மற்றும் 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயரவிருந்தார். விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர்.கணவர் லண்டனில் வேலை பார்த்து வந்த நிலையில் மனைவி தனது வேலையை ராஜினாமா செய்த விட்டு குழந்தைகளுடன் வெளிநாடு செல்ல இருந்த சமயத்தில் தான் உள்ளத்தில் பலியாகிவிட்டார்
குஜராத் பயணி உயிர் பிழைத்த அதிசயம் : வீடியோ வைரல்
குஜராத் விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்றபயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.