தில்லி – ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!
தில்லியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு, வரும் ஜன.2 ஆம் தேதி முதல் நாள்தோறும் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என சீன தூதரகம் அறிவித்துள்ளது
மீண்டும் இயங்கத் தொடங்கிய இண்டிகோ விமானங்கள்
சென்னை விமானநிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின இண்டிகோ விமான சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் சற்று நிம்மதி இருப்பினும் அனைத்து விமானங்களும் இயங்க தொடங்கவில்லை; இன்றும் 48 விமானங்கள் ரத்தாகியுள்ளன. விமானிகள் வாரத்தில் 48 நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற விதி காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டது தற்போது மத்திய அரசு அந்த விதியை ரத்து செய்துள்ளது
இண்டிகோ விமான ரத்தால் மற்ற விமானங்கள் வசூல் கொள்ளை
மத்திய அரசின் புதிய விதிமுறை காரணமாக விமானிகள் பணிக்கு வராத காரணத்தால் இண்டிகோ விமானம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது இதனால் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களின் விமானங்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், அந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் வரலாறு காணாத அளவுக்கு பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு வழக்கமாக ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானத்தில் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை […]
இந்தியா முழுவதும் ஆயிரம் விமானங்கள் ரத்து
விமானிகள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் 1,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தினமும் நாடு முழுவதும் 2,200 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், விமானிகளின் பணி நேர வரம்பு (எப்டிடிஎல்) குறித்து கடந்த மாதம் திருத்தப்பட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, விமானிகளுக்கு பணிநேரம், ஓய்வுநேரம் நிர்ணயிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்:
விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் ஐசிஎஃப்-இல் ஆண்டுக்கு சுமாா் 4,000-க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே முதல்முறையாக விமானங்களில் சரக்குகளை ஏற்றுவதற்கான வசதிகளை உள்ளடக்கிய சரக்கு ரயில் பெட்டிகளுடன் கூடிய 2 சரக்கு ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2018 -ஆம் ஆண்டு ‘வந்தே […]
திருச்சி – டெல்லி நேரடி விமான சேவை துவக்கம்.
திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி தினசரி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு டெல்லியை அடையும். டெல்லியில் இருந்து மதியம் 2.10க்கு புறப்பட்டு மாலை 5.25க்கு திருச்சி வரும்
165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு
சென்னையில் இருந்து 165 பயணிகளுடன்பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட அவசர அவசரமாக மீண்டும்சென்னையில் தரையிறங்கிய விமானம் மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள்பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
விமானத்தில் புகைபிடித்தவர் கைது
குவைத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த தஞ்சையைச் சேர்ந்த சேக் முகமது, 28 என்பவர் கைது. புகைபிடித்ததை தட்டிக்கேட்ட சக பயணியிடம், சேக் முகமது வாக்குவாதம்.
ஏர் இந்தியா விமானத்தில்
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பைக்கு கொல்கத்தா வழியாக நேற்று அதிகாலை போயிங் ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. நடுவானில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென விமானத்தில் கரப்பான் பூச்சிகள் அங்கும், இங்கும் ஓடத்தொடங்கின. கரப்பான் பூச்சிகள் காணப்பட்ட இருக்கையில் இருந்த 2 பயணிகள் இதுகுறித்து விமான பணியாளர்களிடம் புகார் அளித்தனர். உடனடியாக பணியாளர்கள் அந்த பயணிகளுக்கு வேறு இடத்தில் இருக்கைகளை ஒதுக்கினர். பின்னர் விமானம் கொல்கத்தாவில் இறங்கியுடன் கரப் பான் […]
அமெரிக்காவுக்கு விமான சேவை நிறுத்தம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 4 நகரங்கள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.