மீன் எண்ணெய்யால் இவ்வளவு நன்மைகளா?

மீன் எண்ணெயில் `ஒமேகா 3′ கொழுப்பு அமிலம் அதிகம் இருக்கும். இந்த வகை கொழுப்பு அமிலம் உடலுக்கு நன்மை அளிப்பது என்பதால் இதய பிரச்சனை வராது. ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடு எனும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அளவு அதிகரிப்பதை தடுத்து ரத்தஅழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவும். வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலி, எலும்பு தேய்மான பிரச்சனையை சரியாக்கும்.
மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவது நல்லதா?

மீன் எண்ணெய் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இதில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி மற்றும் விட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 100 கிராம் மீன் எண்ணெயில், நிறைவுற்ற கொழுப்பு – 21 கிராம், நிறைவுறதாக கொழுப்பு 16 கிராம் உள்ளன. நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால், இதயத்திற்கு பெரும் பாதிப்பை […]