ராமேஸ்வரம் மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. படகு மூழ்கி மாயமான மீனவர்களை மீட்டு தரவும் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு மீனவர் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி

புதுதில்லியில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் தலைமையில், மீன்வளம் & மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் கா.நவாஸ் கனி, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் […]

15 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது….