தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

தமிழ்நாட்டில் மீன் பிடிக்க சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக் கோரிய வழக்கில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையை அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி. சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கௌரவம் பார்ப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமின் திப்ரூக்கர் நகரில் 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 அலங்கார மீன்களை வனத்துறையினர் மீட்டனர்

சென்னா பார்க்கா எனப்படும் அலங்கார மீன் ஒன்றின் விலை இந்திய சந்தையில் ரூ.75,000 வரை இருக்க கூடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள அனைத்து மீன்களும் செத்து மிதக்கின்றன

இதனால் அந்த பகுதி மிகவும் துர்நாற்றம் அடைந்து பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளார்கள்

15 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது….