தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அதில், “முதல் மாநில மாநாடு நடைபெறும் வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நாம் நிரூபிப்போம்,”இவ்வாறு தெரிவித்தார்.

பொறியியல் தரவரிசையில் தாம்பரம் மாணவி முதலிடம்

என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்த தரவரிசை பட்டியலில் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி தோசிதா லட்சுமி முதலிடம் பெற்றார். அவரது தந்தை நாகராஜன், சாப்ட்வேர் என்ஜினீயர், தாயார் ராதிகா, தோசிதா லட்சுமி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். அவர் பிரென்ச்- 100, ஆங்கிலம் – 98, கணிதம் – 100, இயற்பியல் -100, வேதியியல் 100, கணினி அறிவியல் 100 என 600-க்கு 598 மதிப்பெண் பெற்று இருந்தார். […]