என்.எல்.சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

என்.என்.சி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தீப்பிடித்த இயந்திரத்தின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அருகே மணலி வாயக்காடு பகுதியில் தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

10 தீயணைப்பு வாகன உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி
பெருங்களத்தூரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை அடுத்த முகலிவாக்கதை சேர்ந்தவர் கார்திக், உறவினர் வீட்டு திருமணத்திற்கு கூடுவாஞ்சேரி நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் சென்றபோது பெருங்களத்தூரில் திடீரென தீபற்றிய நிலையில் காரை விட்டு கார்திக் இறங்கிவிட்டார். ஆனால் கார் கொழுந்திவிட்டு எரிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, தாம்பரம் தீயணைப்பு வாகனத்தில் சென்ற வீரர்கள் தீயை கட்டுபடுத்தினார்கள்….
ஹைதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து- 7 பேர் பலி

ஹைதராபாத் ரசாயன கிடங்கில் தீ பிடித்ததால் பெரும் விபத்து- 7 பேர் பலி நாகாலாந்து: கோஹிமாவில் பயங்கர தீ விபத்து- 5 பேர் பலி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வெடிக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து விபத்து

தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குடவாசல் சாலையில் 50-க்கும் மேற்பட்ட வெடிக்கடைகள் உள்ள நிலையில் வெடி விபத்தால் பரபரப்பு
அரியலூர் பட்டாசு விபத்தில் ஆலை உரிமையாளர் ராஜேந்திரன், மருமகன் அருண் ஆகியோர் கைது

திருமானூர் அருகே விராகலூரில் நடைபெற்ற விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.
பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வெற்றியூரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 4 ஆக உயர்வு. 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதி.
அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழப்பு
ஆலையின் உள்ளே 15 பேர் சிக்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி 3 பேர் படுகாயங்களுடன் மீட்பு- எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்
தமிழக கர்நாடக எல்லை அருகே அத்திப்பள்ளி எனும் பகுதியில் இயங்கி வந்த பட்டாசுக்கடை வெடி விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்

பலியானவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வேதனையைத் தெரிவிக்கிறேன். காயமுற்றோர் விரைந்து குணமடைய விழைகிறேன். பட்டாசு போன்ற எளிதில் தீப்பிடிக்கிற ஆபத்தான பொருட்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதே இக்கொடூர விபத்து உணர்த்தும் பாடம். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க வேண்டும். -கமல்ஹாசன்
கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

காரை ஓட்டி சென்ற பெண்மணி உடனே கீழே இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.