பல்லாவரம் அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் நாகல்கேணியில் கார்த்திக் என்பவரது அட்டை கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம், சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், கிண்டி, அசோக் நகர் பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீணிப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஆன பொருட்கள் சேதமடைந்ததுள்ளது. தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் […]
வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு கார் எரிந்து சாம்பல்
பல்லாவரம் அருகே வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட இருந்த சொகுசு கார் தீப்பற்றி எரிந்து சேதம் காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை அருகே உள்ள சூர்யா ஆவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் வயது(29) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சதீஷின் கார் பழுதாகியதால் சென்னையில் உள்ள கார் பழுதுபார்க்கும் கடைக்கு கொண்டு சென்று பழுது பார்த்து விட்டு மீண்டும் அவரது வீட்டின் வெளியே நிறுத்தி […]
தாம்பரம் குப்பை கிடங்கில் திடீர் தீ

தாம்பரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடும் வெயில் காரணமாக தீ பற்றி எரிந்து வருகிறது. கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளதால் பதட்டம், 2 தீயணைப்பு வாகனத்தில் வந்தவீரகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தாம்பரம் கடப்பேரியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு செயல் பட்டு வந்தது. கடும் வெயில் காரணமாக திடீரென தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தாம்பரம், கிண்டி ஆகிய தீயணைப்பு நிலை வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவி […]
மணிமங்கலம் மாற்றுதிறனாளி குடிசை வீடு எரிந்து சாம்பல்

மணிமங்கலம் அருகே தீ விபத்தால் முற்றிலுமாக வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்ட தாய் மற்றும் அவரின் மாற்றுதிறனாளி மகனுக்கு உதவி கரம் நீட்டிய போலீசார், அப்பகுதியினர் பாராட்டு சென்னை மணிமங்கலம் அடுத்த கரசங்கால் எல்.ஐ.சி காலணியை சேர்ந்தவர் செல்வி வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடைய மாற்றுதிறனாளி மகன் சதீஷ் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் திடிரென குடிசை வீடு பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை […]
நடிகரின் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் திரைப்பட நடிகரின் வணிக வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீவிபத்து, இரண்டு கடைகள் எரிந்து நாசம் சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் திரைப்பட நடிகர் பாபு கணேஷ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்படுகிறது. இதில் பல்பொருள் அங்காடி முன்பாக டீ கடையில் காலை டீ போட்டபோது எரிவாயு சிலிண்டர் கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. அதில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ பறவியதில் டீ கடை, ஜீஸ் கடைகள் முற்றிலும் எரிந்து […]
ரஷ்யாவில் ராணுவ விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு?
குரோம்பேட்டை சுடுகாட்டில் பயங்கர தீ விபத்து சவ ஊர்தி எரிந்தது

குரோம்பேட்டை எரிவாயு தகன மேடை அருகே தீ விபத்து தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மின்சார கேபிள்கள் எரிந்து அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு, பழை சவ ஊர்தி ஒன்றும் தீயில் எரிந்தது. உடல் தகனம் செய்ய வந்த பொழுது பூஜை செய்வதற்காக கற்பூரம் கொளுத்திய போது தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் தாம்பரம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு
விமான நிலையம் எதிரே தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்

சென்னை விமான நிலைய எதிரே தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் வாகனத்தை விட்டு தப்பி ஓடிய வாலிபர் திருடிக் கொண்டு செல்லும் பொழுது வாகனம் தீப்பற்றி எரிந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி இரு சக்கர வாகனத்தை சுமார் 25-வயது மதிக்க ஆண் நபர் ஓட்டுச் சென்றுள்ளார். அப்பொழுது பழைய விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. […]
கொசுவத்தியால் தீ விபத்து மேடவாக்கத்தில் முதியவர் கருகி சாவு

மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70) கார்பெண்டரான இவர் அப்பகுதியில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். நேற்று இரவு முதியவர் ராஜமாணிக்கம் வசித்து வந்த வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பள்ளிகரனை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்த பின்பு பார்த்த போது படுக்கையில் ராஜமாணிக்கம் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக […]
மாடம்பாக்கம் அருகே மரக்கழிவுகளில் திடீர் தீ

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சாய் நகரில் காலி மனையில் தாம்பரம் மாநகராட்சியினர் புயலில் சாய்த மரங்கள், கழிவுகளை சேகரித்து வைத்து இருந்தனர். இதில் தீடீர் தீபற்றி எரிந்துவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருகிள் உள்ள குடியிருப்புகளுக்கு பரவும் ஆபத்து உள்ளது. தற்போது தாம்பரத்தில் தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.