மேற்கு தாம்பரத்தில் நாய் தொல்லை பெண்ணுக்கு ஐம்பதாயிரம் அபராதம்

மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் திவ்யா எனும் பெண் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் வகை வளர்ப்பு நாயை கட்டுபாடு இன்றி சாலையில் திரிய விட்டதாக எழுந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகராட்சி கால்நடை மருத்துவர் சக்திதேவி, சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நேரில் விசாரணை, நாயின் உரிமையாளர் திவ்யாவிற்கு 50 ஆயிரம் அபராதம் செலுத்த உத்திரவு நாய் யாரையும் கடிக்க வில்லை வீட்டின் அருகே உள்ளவர்களுடன் பிரச்சனை உள்ளதால் நாய் மீது புகார் எழுப்பியுள்ளனர் என திவ்யா […]
தாம்பரத்தில் விலை உயர்ந்த பைக் ஒட்டி பதற்றம் ஏற்படுத்தியவருக்கு 12000 அபராதம்

தாம்பரத்தில் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பியபடி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செயல்பட்ட வாலிபருக்கு 12,000 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மேற்கு தாம்பரம் சண்முகம் ரோடில் இருந்து தர்காஷ் சாலை ,சி.டி.ஒ காலனி வரை வாலிபர் ஒருவர் விலையுயர்ந்த (Harley Davidson) பைக்கில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பிய படி அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் ஓட்டி சென்றதால் மற்ற வாகன ஒட்டிகள் பதற்றமடைந்தனர். வாலிபரை பிந்தொடர்ந்த […]
வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் அரசு வழங்கும் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம். முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2ஆவது தடவை என்றால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்.
விஜய்க்கு ரூ.1 கோடி அபராதம்!

கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, புலி திரைப்படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் பெற்றதை மறைத்ததாக, நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்ய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்த நிலையில், நடிகர் விஜய் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. […]
சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₨10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம்

சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராத தொகையை உயர்த்த முடிவு மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ₨5,000 அபராதம், மீண்டும் பிடிக்கப்பட்டால் ₨10,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது.
சிம்-காா்டு விற்பனை!

விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்! -மத்திய அரசு அதிரடி. நாட்டில் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை அறிவித்துள்ளது.சிம்-காா்டு இணைப்பை மையமாகக் கொண்டு பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிம்-காா்டு விற்பனையை ஒழுங்குப்படுத்த திட்டமிட்டு மத்திய அரசு வகுத்த புதிய விதிகள் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி […]
எச்சரிக்கை: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது. இதை பயன்படுத்தினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள கடைகளில் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என துப்புரவு ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது, 900 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தாம்பரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு அபராதம்

தாம்பரம் மார்கெட் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு 30 ஆயிரம் அபராதம், 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் முக்கிய குடோன் சீல் வைப்பு மாநகராட்சி சுகாதார துறையினர் அதிரடி நடவடிக்கை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தாம்பரம் மார்கெட் பகுதியில் புழக்கத்தில் உள்ளதாக தாம்பரம் மாநகராட்சி சுகாதார துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று துப்புரவு ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலை, அப்துல்ரசக் சாலை, முத்துரங்கன் சாலை உள்ளிட்ட […]
நடிகர் விஜய் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பு

நேற்று நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு செல்லும் போது போக்குவரத்து சிக்னலை மீறியதற்காக நடிகர் விஜய் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பு
இனி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் உங்க ட்ரிப்பை கேன்சல் பண்ண முடியாது.. வந்தது அபராதம்.. அதிரடி

சென்னையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் முதலில் ரைட் செய்ய ஒப்புக்கொண்டு அதன்பின் கேன்சல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளை தவிர்க்கும் விதமாகவும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் விதமாகவும் பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் சென்னையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு முக்கியமான ஒரு விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. நாம் டாக்சி, ஆட்டோ புக் செய்தால், முன்பெல்லாம் நாம் […]