ஆருத்ரா, ஐஎப்எஸ் நிறுவனங்களை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.24 கோடி மோசடி: 2 இயக்குனர்கள் கைது

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியில் வாசுதேவன் மற்றும் சுரேஷ் ஆகியோர் இணைந்து டே பைடே எனும் நிதி நிறுவனத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கினர். இதில், இருவரும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். ரூ.1 லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்களுக்கு நாள்தோறும் ரூ.1,500 வீதம் பணம் அளிக்கப்படும் எனவும், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் ஏஜெண்ட்களுக்கு நாள்தோறும் 500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாது, முதலீட்டாளர்களை […]