அதிபர் டிரம்புடன் எலான் மஸ்க் கடும் மோதல்

அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மசோதாவை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். ”நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்” என்றும் அவர் கூறினார். ஆனால் மசோதாவைப் பற்றி எலான் மஸ்க் முழுமையாக அறிந்திருந்தார் என ட்ரம்ப் பதில். அளித்து உள்ளார் எலானின் விமர்சனத்தால் தான் ஏமாற்றம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவில் விழாவில் பட்டாக்கத்தியுடன் இளைஞரை வெட்ட முயலும் வீடியோ வைரல்

சென்னை பம்மலில் இளைஞர் ஒருவர் பட்டா கத்தியை வைத்து ஒருவரை வெட்ட முயலும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியை கொண்டு வெட்ட முயலும் இளைஞரை சக நண்பர்கள் மடக்கி பிடிக்கும் வீடியோ பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு எதிரே அந்தோணியர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தப் ஆலயத்தில் 57 வது ஆம் ஆண்டு கொடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் […]