டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் அதனால் கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் மழலையர் பள்ளியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று திறந்து வைத்தார் பின்னார் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ராதாகிருஷ்ணன். சென்னை மாநகராட்சி பொருத்தவரை 420 பள்ளிகள் இருக்கிறது பத்தாவது மற்றும் 12வது வகுப்பு மார்க்கை வைத்து நம் எடை போடுகிறோம். மாநகராட்சி பள்ளியின் செல்லிங் பான்ட் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் அந்த பள்ளியில் படிக்கலாம் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற காரணத்திற்காக அவருடைய கல்வித்தரத்தை தனிக்கவனம் செலுத்தி பத்தாவது மற்றும் […]

காய்ச்சல் பரவல் – தயாராக இருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

நாடு முழுவதும் அதிகரித்திருக்கும் ஃப்ளூ வகை காய்ச்சல், கொரோனா தொற்று போன்றவற்றை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தலைமையில், அனைத்து மாநிலங்களும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில அரசுகள் கண்காணிப்பு மற்றும் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் பதற்றப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.

சென்னை மேயர் பிரியா காய்ச்சலால் பாதிப்பு…!

தொடர்ந்து ஓய்வு இல்லாமல் பணியாற்றி வந்த மேயர் பிரியா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இரு நாட்களுக்கு முன் ஓட்டேரி, கிருஷ்ணப்பதாஸ் சாலையில், பொது மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க சென்ற மேயர் பிரியாவை, பொது மக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்வி கேட்டனர். அந்த வீடியோ, நேற்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. சில நாட்களாக தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வீடியோ வேகமாக பரவியது….

டெங்கு காய்ச்சல் இருந்து பாதுகாப்பது எப்படி-?

கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல் உடல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தக் கூடியது.காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்களையொட்டிய பகுதியில் வலி, எலும்பு பகுதிகளில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலுடன் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை பெறுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும். ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக […]

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி டாக்டர் மரணம்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக இவரது மருத்துவ அறிக்கைகள், மருத்துவ மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. . கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் […]

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் அபாயம்

செப்டெம்பர் மாதத்தின் கடந்த சில நாட்களில் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.மழையுடன் சில பிரதேசங்களில் நுளம்பு அடர்த்தி அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாடு முழுவதும் இதுவரை சுமார் 63,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன. இம்மாதம் 12 ஆம் திகதிக்குள் மாத்திரம் அதன் எண்ணிக்கை 1,000 ஐ எட்டியுள்ளது. தினசரி பதிவாகும் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் கணிசமாகக் […]