காரடையான் நோன்பு இருப்பது எப்படி?

பாராசர முனிவர் ஆலோசனைப்படி மாத்ர நாட்டு மன்னன் அசுவபதி சாவித்ரி விரதம் செய்ய அவன்முன் தோன்றிய சாவித்ரி தேவி, மன்னன் மனைவி மாலதிக்கு தன் அம்சமாக ஒர் மகளாக ஜனிக்க அருள் கொடுத்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சாவித்ரி மணப் பருவத்தில் துயிமதிதேசன் மகன் சத்யவானின் குணவிசேஷங்களைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்காமலேயே காதல் கொண்டாள். அவன் அற்ப ஆயுள் உள்ளவன் என நாரதர் சொல்லியும் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சத்யவானின் பெற்றோர்கள் பார்வை இழந்து […]

செல்வம் தரும் முக்கோடி ஏகாதசி விரதம்

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியானது வைகுண்ட ஏகாதசியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தான், அர்ஜூனனுக்கு, கிருஷ்ண பகவான் கீதையை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ராவணனால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கும்படி, முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை வணங்கி வேண்டிய தினமும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியாகும்.இதனால் இந்த ஏகாதசிக்கு ‘முக்கோடி ஏகாதசி’ என்ற பெயரும் உண்டு. இது தவிர ஏகாதசி விரதமிருந்து தான் குசேலன் பெரிய செல்வந்தன் ஆனான். பாண்டவர் களில் ஒருவரான தர்மராஜா ஏகாதசி […]

வைகுண்ட ஏகாதசி விரதமுறை

வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப் படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும்.இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும்.வைகுண்ட ஏகாதசி அன்று திருமாலுக்குப் பிரியமின துளசி தீர்த்தத்தை மட்டுமே உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத […]

சோமவார விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சோமசுந்தர கடவுள் என்பது சிவனை குறிப்பது. சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருளும் உண்டு.திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என அழைக்கப்படுகிறது. திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது மிகவும் விசேஷமான சோமவார விரதமாக அமையும். பிரதோஷ காலம் சிவனுக்கு மிகவும் உகந்தது என்பது அனைவரும் அறிந்ததே.வாழ்வில் சகல கஷ்டங்களும் நீங்க சோமவார விரதமிருந்தால் போதும். சிவனை மகிழ்விக்க […]