விவசாயிகளுக்கு 50% மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு

விவசாயத்திற்காக புதிய மின் மோட்டார் வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு 50 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்த சிருறு குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகள் இதனை https://mis.aed.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விளைநிலங்களை நாசம் செய்யும் மயில்கள்.. விவசாயிகள் வேதனை

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களை மயில்கள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கும் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது. அப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி எல்லை அருகே திரண்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

அரியானா – பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம் இரும்பு தடுப்புகளை கடக்க முயன்ற விவசாயிகளை தடுக்க முயன்ற காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீச்சில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விவசாயிகள் முழு பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி விவசாயிகள் போராட்டம் சம்பு பகுதியில் 1,200க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் முகாமிட்டுள்ள விவசாயிகள்
குறைந்தபட்ச ஆதரவு விலை, மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களை விவசாயிகள் நிராரித்தனர்

டெல்லி சலோ பேரணியை நாளை காலை 11 மணி முதல் மீண்டும் தொடங்குவோம் – விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 ஆம் தேதி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.