கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்

ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் பலமுறை எஸ்.பி.யிடம் விஷ சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்துள்ளார். கஞ்சா, விஷச்சாராய விற்பனை இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது; புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை- ஈ.பி.எஸ்.

விஷச்சாராய உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? அதை கண்டறிந்து முழுமையாக அழிக்கவும் காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு

கருணாபுரம் சம்பவம் குறித்து நேரில் சென்று முழுமையாக விசாரித்து 2 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழக காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால், உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவுக்கு முதலமைச்சர் உத்தரவு விஷச்சாராய சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைப்பு. அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் ஆணையம் 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு..

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனு

அவசர வழக்காக விசாரிக்க கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு..

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

கள்ளக்குறிச்சியில் சம்பவத்தால் சட்டப்பேரவை அதிர்ச்சியும் துயரமும் கொள்கிறது சபாநாயகர் அப்பாவு