உரிய முன்னறிவிப்பின்றி, முன்கூட்டியே புறப்பட்டு சென்ற விமானம்

திருச்சி விமான நிலையத்தில் செய்வதறியாது தவிக்கும் 25 பயணிகள் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 4.20 மணிக்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்டு சென்ற விமானம்.
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட சென்னையில் இருந்து மதுரை வழியாகக் கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது

தற்போது திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16127) வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 29 மற்றும் 30-ந் தேதிகளில் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 6 முதல் நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்

நாடு முழுவதும் அதிக வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியே இந்த ரயிலை தொடங்கி வைத்து வருகிறார். இது பகல் நேர ரயில் ஆகும்:தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதியே இந்த ரயில் விடப்படும் என்றும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்றும் தெரிகிறது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். இதற்கிடையே வந்தே பாரத் […]