ஜன.7ல் பட்டதாரி ஆசிரியர் தேர்வு

2023-24ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறுகிறது. www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு.

+1, +2 மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றம்?

சென்னை கல்வி மாவட்டத்தில் டிச.7ல் நடைபெறவிருந்த 11, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் தேர்வு தேதி மாற்றம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் 7ஆம் தேதி மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிரமம் இருக்கக்கூடும் என்பதால் தேதியை தள்ளிவைக்க ஆலோசிக்கப்படுவதாக தகவல்

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு: டிசம்பர் 1-ம் தேதி வெளியீடு

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு டிசம்பர் 1-ம் தேதி காலை 11 மணி வெளியிடப்பட உள்ளது. கடந்த 7-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வை 1,27,673 மாணவர்கள் எழுதினர். திறனாய்வுத்தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in-ல் முடிவை அறிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அறிவிப்பு:

தோட்டக்கலைத்துறை அலுவலர் நிலையில் 263 பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு அறிவிப்பு. இன்று முதல் டிசம்பர் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. பிப்ரவரி 7ம் தேதி காலை, மாலையில் கணினி வழி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு.

10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது. 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி […]

மாணவர்களுக்கு தெரிந்த மொழியில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்: சித்தராமையா

மத்திய அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தி அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் மாநிலங்களின் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.இந்தியில் தேர்வு நடத்தப்படுவதால், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள்.இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, குழந்தைகளுக்கு (மாணவ- […]