மக்களவைத்தேர்தல் அறிவிக்கபட்டுள்ள நிலையில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை முன்னதாகவே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

அதேபோல வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4-க்கு பிறகு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்.,13க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்

சென்னை: லோக்சபா தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்.,15ல் துவங்கியது. ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு பிப்., 15ல் துவங்கி, இந்த மாதம், 13ம் தேதி நிறைவு பெற்றது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் பொதுத்தேர்வு துவங்கியது; ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, பிப்., 21ல் தேர்வு துவங்கியது; இந்த […]

4,000 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது;

மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்; ஆகஸ்ட் 04-ம் தேதி தேர்வு நடைபெறும் என டிஆர்பி அறிவித்துள்ளது; மேலும் தகவல்களுக்கு : trb.tn.gov.in

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து

“என் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்து தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர் கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறையில் உச்சம் தொட வாழ்த்து”

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம்

மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ. தீவிரம். இந்தாண்டு நவம்பர் மாதத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை அறிவியல், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் அமல்படுத்த ஏற்பாடு.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்:

விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல். விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல். வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம். நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் […]

இந்திய ரயில்வேத் துறையில் 9000 டெக்னீசியன் காலியிடங்கள் அறிவிப்பு கணிணி அடிப்படையிலான தேர்வின் அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் காலியாக உள்ள 9000 தொழில்நுட்பாளர் (RRB Technician Recruitment) பதவி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை மார்ச் மாதம் 9ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வாரியத்தின் உதவி எஞ்சின் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பாளர் பதவி இடங்களுக்கான பணியாளர் சேர்க்கை என்பது உலகின் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் […]

போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதா – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில், மாநிலங்களவையில் இன்று பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது. சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. முன்னதாக மக்களவையில் இந்த மசோதா கடந்த 6-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. முறைகேடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் -அமைச்சர்