குரோம்பேட்டை ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள எஸ்கலேட்டர் பழுதாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக அது பழுது பார்க்கப்பட வில்லை. நெடுஞ்சாலைத்துறை பழுது பார்க்காததை கண்டித்து குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதன் தலைவர் வி. சந்தானம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி, வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், அர்கீஸ்வரர் காலனி நலச் சங்கத்தின் செயலாளர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.

சூறைக்காற்றுடன் மழை குரோம்பேட்டை நடைமேடை கூரை பறந்தது

சென்னை குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் விதமாகவும் ரயில் நிலையம் செல்வதற்க்கும் பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கபட்டுள்ளது. இதனால் தினமும் ஏராளமானோர் இந்த நகரும் படிக்கட்டிகள் மூலம் ரயில் நிலையத்திற்க்கும், ரயில் நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலை வருவதற்க்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இன்று திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நகரும் […]