நாடாளுமன்றத் தேர்தல்- ஆயத்தமாகும் அதிமுக

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பணிகளை தொடங்கியது. 76 அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சென்னையில் தங்கி இருக்க தலைமைக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .இன்று மாலை மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.இன்று மாலை முதல் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தனித்தனியாக ஆலோசனை […]

அதிமுக மா.செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை என தகவல்.

எண்ணெய் கசிவு – கூடுதல் நிவாரணம் வழங்குக

“எண்ணூரில் கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை-எடப்பாடி பழனிசாமி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தென்மாவட்ட பெருமழை குறித்து வானிலை ஆய்வு மையம் கடந்த 14-ந்தேதியை எச்சரிக்கை விடுத்தது. சென்னை பெருவெள்ளத்தில் கற்றுக்கொண்ட பாடம் மூலம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி.

நிவாரண உதவிகளை விரைந்து வழங்குங்க தென்மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு அதிகளவு முகாம்களை தொடங்க வேண்டும். வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை அரசு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்”- எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர். தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி, தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தேமுதிகவை பல படிகள் முன்கொண்டு செல்ல, பாஜக சார்பாக வாழ்த்துகள்- பாஜக மாநிலத்தலைவர் […]

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம். சாட்சியப்பதிவை ஒரு மாதத்தில் முடிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு!

“ஈபிஎஸ் நிதியை பெற்றுத்தர வேண்டும்”

தமிழக அரசு கோரியுள்ள ₨5,060 கோடி இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்மத்திய அரசிடமிருந்து ஈபிஎஸ் நிதியை பெற்று தர வேண்டும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஈ பி எஸ் முதல்வராக இருந்த போது 50,000 கோடி இடைக்கால நிவாரணத்தை கேட்டார். அன்றைய எதிர்க்கட்சி தி மு க பெற்று தந்ததா? இடைக்கால நிவாரணம் என்றால் என்ன என்றே தெரியாது, வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எதையாவது கேட்டு விட்டு புளகாங்கிதம் அடைவதை நிறுத்தி கொள்ளவும். […]

இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

காலில் ஏற்பட்ட காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர் வாதம்

சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டதாக டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் மீது எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார் இவ்வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்த தனி நீதிபதி […]