எடப்பாடிக்கு எதிராக பேசவில்லை – பிரேமலதா

மேல்மருவத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “என்னுடைய தேமுதிக சார்பில் நடைபெறும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் இரண்டாம் கட்ட பயணம் வருகின்ற ஐந்தாம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை […]

தமிழக தொழில்துறையை அதலபாதாளத்திற்கு தள்ளிய தி.மு.க. அரசு வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தமிழக தொழில்முனைவோர் அரசின் கையாலாகா தனத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

“பாஜக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள், இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது

வட மாநிலங்களையும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கும் அறிக்கையாக இல்லை தமிழ்நாட்டின் மீது பாஜக அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இது காட்டுகிறது”

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது

தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த விடியா திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

எடப்பாடி பழனிச்சாமி தலைமயைில் கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி பற்றி சட்டசபையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து உண்ணாவிரதம் காலை 9 மணிக்கு தொடங்கி உள்ள உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது அதிமுக எம்எல்ஏக்கள் நடப்பு சட்டசபை தொடர் முழுவதும் பங்கேற்க நேற்று தடை விதிக்கப்பட்டதால் உண்ணாவிரதம்

இந்த கள்ளச்சாரய வியாபாரத்தில் இரண்டு தி.மு.க கவுன்சிலர்களுக்கு தொடர்பு உண்டு

மாவட்டச் தி.மு.க செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்கிறார்.இது குறித்து சி.பி.ஐ.விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.உயிரிழந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்

விஷ சாராயம் குடித்ததால் இதுவரை 50 பேர் உயிரிழப்பு

சட்டப்பேரவை தலைவர் வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி விட்டார் – ஈபிஎஸ் விஷ சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினோம் சபாநாயகரின் செயல் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது எதிர்க்கட்சி துணைத் தலைவர் மீதான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எங்களை அடக்கி ஒடுக்க முயற்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது பரபரப்பான கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் விற்கப்பட்டிருக்கிறது – எடப்பாடி பழனிசாமி