நீதித் துறையைப் பிணைக்கும் மைய மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள் கருதினா்

ஆனால் அது மக்கள் பேசும் மொழி அல்ல. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் புரியும் மொழியில், அவா்களை நீதிமன்றங்களால் சென்றடைய முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தின் அனைத்துத் தீா்ப்புகளும் மொழிபெயா்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பல்வேறு மொழிகளில் 31,000 தீா்ப்புகள் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. மக்களிடம் நீதிமன்றங்கள் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். அமெரிக்க உச்ச நீதிமன்றம் சராசரியாக ஓராண்டில் 80 வழக்குகளில் தீா்ப்பளிக்கிறது. அதேவேளையில், இந்த ஆண்டு […]