ஆன்ட்ரூ-வின் ‘இளவரசர்’ பட்டத்தை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பறித்தார்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சகோதரர் ஆன்ட்ரூவின் ‘இளவரசர்’ பட்டத்தை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பறித்தார். இளவரசர் பட்டத்தை பறித்தது மட்டும் அல்லாமல் ஆன்ட்ரூவை மாளிகையை விட்டும் வெளியேற்றினார். அரச குடும்பத்தில் முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆக்ஸ்ஃபோர்டு கல்வி மையம் வழங்குகிறது

சென்னை: இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் (ஓஐஇஎஸ்) சார்பில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர், தலைமை வணிக அதிகாரி ஆண்டி கால்டுவெல், […]

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்அவுட். சிராஜ் 4 விக்கெட்களையும், ஜடேஜா, குலதீப் தலா 2விக்கெட்களையும் வீழ்த்தினர்; 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா.

லக்னோவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை, இந்தியா 100 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது

முதலில் பேட் செய்த இந்தியா 229 ரன்கள் எடுத்தது..இங்கிலாந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.34.5 ஓவரில் இங்கிலாந்தை இந்தியா சுருட்டியது.இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இதுவரை ஆடிய 6 ஆட்டங்களிலும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாதம் இறுதியில் இந்தியா வருகை

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சந்திரயான் – 3 வெற்றியும் இங்கிலாந்து வயிற்றெரிச்சலும்

நிலவின் தென் துருவத்தில் யாரும் இதுவரை செல்லாத இடத்தில் சந்திராயன் மூன்று வெற்றிகரமாக இறங்கி படம் பிடித்துக் கொண்டிருக்கிறது.இந்த சாதனையை உலகமே பாராட்டி வருகிறது. இருந்தாலும் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒரு நாடு இப்படி சாதனை படைக்கிறதே என்ற வயிற்று எரிச்சல் இங்கிலாந்து காரர்களுக்கு ரொம்பவே உள்ளது.அங்கே ஒரு செய்தி வாசிப்பாளர் இனிமேல் இந்தியா எங்களிடம் உதவி கேட்டு வரக்கூடாது.2016 முதல் 2021 வரை நாங்கள் வழங்கிய கோடிக்கணக்கான ரூபாயை திருப்பித் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.இது […]

Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா

இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்குள்ள மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.  இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டது.  இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.