டாஸ்மாக் ஊழியர்கள் ஆயிரக்கணக்கனோர் சென்னையில் கைது

பணி நிரந்தரம் கோரியும், அரசு நிறுவன ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கோரியும்,சட்டமன்ற முற்றுகை தமிழக அரசே! காவல் துறையே!! மாநில சிறப்புத்தலைவர்தோழர் கு.பாரதி உள்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்!இடது தொழிற்சங்க மய்யம் – LTUC

அரசு ஊழியர் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் உயர்வு

அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்கான கல்வி முன்பணத் தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு. தொழில்முறை கல்வி – ரூ.50,000; கலை – அறிவியல், பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலுவோருக்கு ரூ.25,000 ஆக உயர்வு. உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-24 கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசாணையில் தகவல்.

காஞ்சிபுரம் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் 1லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு ஊழியர்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவை ரத்து செய்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய 1லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு ஊழியர்கள் கைது. காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரர் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த உலகநாதன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா பண்ருட்டி பகுதியில் உள்ள தனது மாமியாரின் சொத்துக்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளதாகவும், அந்த […]

அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. இந்த முறை 3% உயர்த்தப்பட்டு, அகவிலைப்படி 45% ஆக உயரும் என்றும், ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐடி நிறுவனம்

முன்னணி ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை ரத்து செய்து ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளன. ஆனால், காக்னிசன்ட் நிறுவனம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ”ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம், அலுவலகத்துக்கு வர வேண்டிய கட்டாயமில்லை” என அறிவித்துள்ளது. சமூக மூலதனம் முக்கியமானது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர் கடன் தொல்லையால் தற்கொலை

சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர், பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் வங்கிக்கு வந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.