டேட்டிங் செல்ல ஊதியத்துடன் விடுப்பு அறிவித்த நிறுவனம்

தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம், தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து, இந்த முடிவை அறிவித்துள்ளது.
50 சதவீத பென்ஷன் கோரி ரயில்வே தொழிலாளர் போராட்டம்

கடைசி சம்பளத்தில் 50 சதவீகிதம் பென்சன் வழங்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க கோரி தாம்பரம் மின்சார ரெயில்வே பனிமனை முன்பாக 300 க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நாடு முழுவதும் 2004ல் அறிவிக்கப்பட்ட தேசிய பென்சன் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கவில்லை என கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று தாம்பரம் மின்சார ரெயில்வே பணிமனை முன்பாக எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுசெயலாளர் ஈஸ்வரலால் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் […]
டெல்லி மகளிர் ஆணையத்தில் பணிபுரியும் 223 ஊழியர்களை நீக்கி டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி உத்தரவு!
தாம்பரம் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மே தின விழா உதவி

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கிய நலச்சங்கத்தினர் பாராட்டினர் மே 1 ஆன இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடபட்டு வருவதை முன்னிட்டு வருடந்தோறும் பெருங்களத்தூர், பீர்கன்கரனை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக உழைப்பாளர்களை பாராட்டி வரும் நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட குண்டுமேடு பகுதியில் வசித்து வரும் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுடன் உழைப்பாளர்கள் தினத்தை சேர்ந்து கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மஹேதிர பூபதி அவர்களை நேரடியாக அவர்களின் […]
இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,பர்மா ரயில்பாதைஇரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,

தமிழ் மரபுப்படி தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் இன்று (01.05.2024) தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “நடுகல்“ திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.எம் அப்துல்லா, தாய்லாந்து நாட்டிற்கான மலேசிய நாட்டின் தூதர் திரு.ஜோஜி சாமுவேல் ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மனைவியை வைத்து கடனை வசூலித்த idfc வங்கி

சேலம் வாழப்பாடி ஐ டி எப் சி ஊழியர், கூலித் தொழிலாளியிடம் அடாவடியாக கடனை வசூலித்து அத்துமீறல், கடன் பெற்ற தொழிலாளி வீட்டில் இல்லாததால் மனைவியை அழைத்துச் சென்று கெடுவிதித்த IDFC ஐடிஎப்சி ரூபாய் 770 தவணையை செலுத்திய பிறகு கூலித் தொழிலாளி மனைவி விடுவிப்பு, ஐ டி எஃப் சி வங்கி மீது கூலி தொழிலாளி கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை
அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இம்மாத இறுதிக்குள் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.

நேற்று முதல் நீடித்த அரசு போக்குவரத்துக் தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்தில் தகவல். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என ஒப்புதல்.
25 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை சரிவு

25 ஆண்டுகளில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 10 பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 51,744 குறைந்துள்ளது. இதன்மூலம் 10 பெரிய ஐ.டி. நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 20.6 லட்சமாக உள்ளது.