எலான் மஸ்க் சொத்து மதிப்பு 58 லட்சம் கோடி

அமெரிக்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பல்வேறு தொழில்களில் முன்னணியில் இருக்கிறார் குறிப்பாக விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்க அரசுக்கு இணையாக தனியாக நிறுவனம் நடத்துகிறார் அவரது சொத்து மதிப்பு 58 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டது உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்

மூளையில் சிப் பொருத்தப்பட்ட 2-வது நபர்! எலான் மஸ்க் வெளியிட்டுள்ள தகவல்

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்கும் கணினிக்குமான தொடர்பை உருவாக்க மின்னணு சாதனமான ‘சிப்’ ஒன்றை உருவாக்கியுள்ளது. நாம் மனதில் நினைக்கும் எண்ணங்களின் மூலம் ஸ்மார்ட்போன் உள்பட நவீன தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதே மூளையில் பொருத்தப்படும் நியூராலிங்க் சிப் வடிவமைக்கப்பட்டதன் நோக்கம். எதிர்காலத்தில் கைப்பேசிகளே இருக்காது. நியூராலிங்க் மட்டுமே இருக்கும் என்று எலான் மஸ்க் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது. விபத்தில் தோள்பட்டைகளுக்குக் கீழே செயலிழந்துவிட்ட நோலண்ட் அர்பாக் என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் […]

டுவிட்டர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது- எலான் மஸ்க்

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் லாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் மூலம் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்தள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வரவால் 50 சதவீதம் குறைந்துள்ளது. […]