அஸ்ஸாமில் ரயில் மோதி ஏழு யானைகள் பலி
அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சைராங் – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைக் கூட்டம் மீது மோதியதில் 7 யானைகள் உயிரிழந்தன, ஒரு யானை காயமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சியின் கோர முகம்… 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே திட்டம்

வரலாறு காணாத வறட்சியால் நமீபியாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது கடந்த ஆண்டு மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டம்
8 மாதத்தில் 47 யானைகள் இறப்பு

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில், 47 யானைகள், 5 புலிகள் இறந்துள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என, வனத்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
ஜெயிலர் படத்தின் காவலா பாடலுக்கு நடனமாடிய யானை
யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது ஏன்-?

தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு. மனிதர்களாகிய நமக்கு கூட தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசமும் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர்.பிராணயாமம், வாசியோகம் போன்றவைகளும் […]
ஆந்திர மாநிலம் பார்வதிமனியம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது

குறிப்பாக கொத்தவலசை கிராமத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்கள் முன்பு கொமரடா மண்டலத்தில் பயணிகள் சென்ற பஸ்சை வழிமடக்கிய ஒற்றை யானை கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்தியது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில் பார்வதிமனியம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதை பார்த்த பயணிகள் சிலர் அலறியடித்து ஓட்டம் […]
நீலகிரி மாவட்டம் சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே அகற்ற வேண்டும்

என முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கபட்ட உச்ச நீதிமன்ற விசாரணை குழு உத்தரவு 2018ம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்குழு 4 ஆண்டுகள் பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிங்காரா பகுதிகளில் ஆய்வு செய்து விடுதிகளின் விதிமீறல்கள் குறித்து விசாரணையும் மேற்கொண்டது.
காரை தந்தத்தால் குத்தி தாக்கிய யானை

கேரள மாநிலம், அட்டப்பாடியில் நேற்று இரவு காரை வழிமறித்து தந்தத்தால் 3 முறை குத்தித் தாக்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காருக்குள் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், தாக்குதலை நிறுத்திய யானை திரும்பி காட்டுக்குள் சென்றது. இதனால் யாரும் காயம் ஏற்படாமல் தப்பினர். யானை தந்தத்தால் குத்தியதில் காரில் 3 பெரிய ஓட்டைகள் விழுந்துள்ளது.
தெப்பக்காடு யானைகள் முகாமில், யானை பராமரிப்பாளராக முதல் பெண் (பெள்ளி) நியமனம்

பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின் ஆஸ்கர் விருது வென்ற எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் குறும்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் பெள்ளி