புரிய மின் இணைப்பு கட்டணம் உயர்வு

புதிய மின் இணைப்பு, மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் புதிய மின் இணைப்பு வழங்க, மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்புத்தொகை, வளர்ச்சிக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணத்தை, மின் வாரியம் வசூலிக்கிறது

ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதா? – கோர்ட் கண்டனம்

தாம்பரம் அருகே நன்மங்கலம் ஏரிப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது நீதிபதிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு எப்படி இணைப்பு கொடுத்தீர்கள் என்று விளக்கம் தருமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதில் தாம்பரம் மாநகராட்சியையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மின்கட்டணம் உயர்கிறது.

தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் படி ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 6 சதவீதம் மாநில அரசு உயர்த்த வேண்டும் என்பதாகும். அதன்படி இந்த கட்டண உயர்வு வருவதாக கூறப்படுகிறது ஆனாலும் தமிழக அரசு இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை

தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்…

வீடுகளுக்கான 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற செய்தி உண்மை இல்லை சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்தியை நம்ப வேண்டாம்.

300 யூனிட் இலவச மின்சாரம்

பிரதமரின் சூரிய வீடுகள் இலவச மின்சார திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு மாதம் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்; இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளில் வசிப்போர் பயன்பெறுவர் -நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்