மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 14 ரயில்கள், தாம்பரம்-கடற்கரை இடையே 14 ரயில்கள் ரத்து; இரு மார்க்கங்களிலும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 200 ரயில்கள் இயக்கப்படும்
தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலட்ரீசியன் உயிரிழப்பு மேடவாக்கம், ஜலடியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (45) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டியை ஒயர் மூலம் மின்சார பெட்டியில் இணைப்புதற்காக முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடிகாக கோவிந்தசாமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு […]