முற்றிலும் பொய்த்துப் போன வாக்கு கணிப்புகள்!

மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் கூறியிருந்த நிலையில், அது பொய்த்துப் போயுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகு, தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் முகமைகளால் வெளியிடப்பட்டன. இக்கணிப்புகளில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக […]
மக்களவைத் தோ்தல் செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும்: தோ்தல் நிபுணா் கணிப்பு

நடப்பு மக்களவைத் தோ்தலுக்கான செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும் என தோ்தல்கள் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா் ஒருவா் கணித்துள்ளாா். கடந்த காலங்களில் நடைபெற்ற தோ்தல் செலவுகளைவிட தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் செலவே மிக அதிகமானது எனவும் உலகிலேயே மிக அதிகமாக செலவு செய்யப்படும் பிரம்மாண்ட தோ்தலும் இதுதான் எனவும் அவா் தெரிவித்தாா்
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி பேசியதாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தன. இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை […]
மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம்;

200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்; கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்”
23ஆம் தேதி சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

இந்திய தேர்தல் ஆணையர் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழகத்தில் ஆலோசனை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.