2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான தேதி விவரம் அறிவிப்பு

விண்ணப்ப படிவங்களை வரும் பிப்.19ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ₹50,000 மற்றும் ₹2,000 செலுத்தி விண்ணப்ப படிவங்களை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிப்பு. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச்.1ம் தேதி முதல் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்த வேண்டும் – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

மார்ச் 15-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

மே 23. ந் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிக்கப்பட்டு புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

கருப்பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியதாக மத்திய அரசு கூறிய நிலையில் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இனிமேல் தேர்தல் பத்திரங்களை வழங்கக் கூடாது என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது

தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 உட்பிரிவு 1 உட்பிரிவு ஏவை மீறும் வகையில் உள்ளது. -சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

மார்ச் முதல் அல்லது 2ஆவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு?

நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது 2ஆவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல்; தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தேர்தல் ஆணையர்கள் மாநில வாரியாக சென்று இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்யத் திட்டம் மாநிலம் வாரியாக ஆய்வுகள் முடிவதற்கு மார்ச் முதல் வாரம் ஆகும் என்பதால் அதன் பிறகே தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்

“39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்”

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47% வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்..

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர் லால் குமாவத் நியமனம் ✦ ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமனம்

தலைமைச் செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்;

தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி முதல் இடத்திலும், கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி 2-வது இடத்திலும் உள்ளது சோழிங்கநல்லூர் தொகுதி – 6,60,419 வாக்காளர்கள்கோவை கவுண்டம்பாளையம் – 4,62,612 வாக்காளர்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதிப் பங்கீட்டு குழு அமைப்பு:

முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் கொண்ட குழு அமைப்பு.