மக்களவை தேர்தல் தேதி நாளை மாலை அறிவிப்பு

தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டம் மத்தியப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் 2 அல்லது 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம். உத்தரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் மாநிலங்களில் 6-7 கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல், மக்களவை […]

இந்தியா முழுவதும்  லோக்சபா தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு?

லோக்சபாவின் பதவிக்காலம் ஜுன் 16ல் முடிவுக்கு வரும் நிலையில் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு 2 பேர் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்

தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் வழங்கிய தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு

Future Gaming and Hotel services நிறுவனம் மிக அதிகமாக ரூ.1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. Mega Engineering and infrastructure limited நிறுவனம் 821 கோடி ரூபாயும், வேதாந்தா நிறுவனம் ரூ.375.65 கோடியும் வழங்கி உள்ளன. Haldia Energy Limited ரூ.377 கோடியும், Quick Supply chain private Limited ரூ.410 கோடியும் வழங்கி உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையராக Gyanesh Kumar நியமனம்

இவர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் போது ராம ஜென்மபூமி டிரஸ்ட் உருவாக்கியவர். பிறகு 2019ல் காஷ்மீரில் Article 370 ரத்து செய்தார். பிறகு 2021ல் அமித்ஷா உருவாக்கிய கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராக இருந்தார். இவர் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்த போகிறார்.

புதிய தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்!

கேரளாவை சேர்ந்த ஞானேஷ்குமார், பஞ்சாபை சேர்ந்த சுக்விந்தர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமனம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம்;

200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்; கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்”

தமிழகத்தில் நாடாளுமன்றதேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், அதிகாரிகள் குழு தமிழகத்தில் 2 நாள் முகாம்

டிஜிபி, தலைமைச் செயலாளருடன் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை

தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி முடிவாகும். மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

இன்று மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது வரவிருக்கும் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை. 2014ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டோம். திராணி இருந்தால் இந்த அரசை செய்ய சொல்லுங்கள் திமுக கூட்டணியிலிருந்து எத்தனை கட்சிகள் வெளியே போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இரட்டை இலை […]

மக்களவை தேர்தலில் எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை

-ஜெயக்குமார் விளக்கம்? மக்களவை தேர்தலில் எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், 2014 தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்திட்டவர் ஜெயலலிதா. அதனால் இது வாரிசு அரசியலில் வராது. அதிமுகவில் பற்று உள்ளவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். அதிமுகவில் உள்ளவர்களுக்கு வலை வீசி ஆள்பிடிக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. பூச்சாண்டியை போல மிரட்டி ஆள்பிடிக்கும் வேலையில் பா.ஜ.க. தலைவர் […]

சண்டீகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து: உச்சநீதிமன்றம்

சண்டீகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் எக்ஸ் (X) எனக் குறிப்பிட்ட 8 வாக்குகளும் இந்தியா கூட்டணியின் மேயர் வேட்பாளருக்கு சாதகமாக வழங்கப்பட்டது. இதன்மூலம், ஆம் ஆத்மியின் கவுன்சிலர் குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்ததால் சண்டீகர் மாநகராட்சியின் மேயராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் துணை மேயரானார். மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் குற்றவாளியாக உச்சநீதிமன்றம் அறிவித்தது