தேர்தலை நடத்த ரூ.750 கோடி தேவை

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த மாநில அரசிடம் 750 கோடி ரூபாய் கோரிய தேர்தல் ஆணையம். 2021 சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலாக 150 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாக தகவல்.

மக்களவைத்தேர்தல் அறிவிக்கபட்டுள்ள நிலையில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை முன்னதாகவே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

அதேபோல வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4-க்கு பிறகு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுபன்ற தேர்தல்‌ 2024-ஐ முன்னிட்டு

தலைமைச்‌ செயலகம்‌, நாமக்கல்‌ கவிஞர்‌ மாளிகை நான்காவது தளத்தில்‌ இயங்கி வரும்‌ மாநில அளவிலான வாக்காளர்‌ குறை தீர்க்கும்‌ மையத்தை (with Toll Free No. 1800 4252 1950) தலைமைத்‌ தேர்தல்‌ அதிகாரி மற்றும்‌ அரசு முதன்மை செயலாளர்‌ சத்யபிரதா சாகு ஆய்வு செய்தார்‌. இந்நிகழ்வின்போது கூடுதல்‌ தலைமைத்‌ தேர்தல்‌ அதிகாரி சங்கர்‌ லால்‌ குமாவத்‌ மற்றும்‌ இணைத்‌ தலைமைத்‌ தேர்தல்‌ அதிகாரி ஸ்ரீகாந்த் ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

ஏப்.,13க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்

சென்னை: லோக்சபா தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்.,15ல் துவங்கியது. ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு பிப்., 15ல் துவங்கி, இந்த மாதம், 13ம் தேதி நிறைவு பெற்றது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் பொதுத்தேர்வு துவங்கியது; ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, பிப்., 21ல் தேர்வு துவங்கியது; இந்த […]

நாடாளுமன்றத் தேர்தல் 2024

மறுமலர்ச்சி திமுக – வேட்பாளர் அறிமுகம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி திமுக-வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதிக்கான வேட்பாளரை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை 3.30. மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் அறிவிக்கிறார். தலைமைக் கழகம்மறுமலர்ச்சி தி.மு.க.‘தாயகம்’சென்னை – 8

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக புதின் அறிவிப்பு

ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விளாதிமிர் புதின் 5வது முறையாக அதிபராகியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 2030 வரை ரஷ்யாவின் அதிபராக புதின் நீடிப்பார். கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் பிரதமர் அல்லது அதிபராக புதின் பதவி வகித்து வருகிறார்.

தேர்தல் பத்திரங்கள் – புதிய தரவுகள் வெளியீடு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியீடு யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகள் பெறப்பெற்றது என்ற தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையத்தின் புதிய தரவுகளின்படி, தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக மொத்தமாக ரூ.6,986.5 கோடியை பெற்றுள்ளது. இவற்றில் 2019-20ம் ஆண்டு மட்டும் ரூ.2,555 கோடியை பாஜக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளது.

தேர்தல் பத்திரம் தேர்தல் பத்திரம்னுரெண்டு மூணு நாளா பேசுறாங்களே

அந்த கணக்கை ஸ்டேட் பாங்க் வெளியிட்டது. அதில் தமிழகத்தை சார்ந்த மார்ட்டின் தான் நம்பர் 1 என செய்திகள் வெளியாகியுள்ளது ஸ்டேட் பேங்கிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்கியதில் முதல் இடத்தில் நம்முடைய தமிழகத்தை சார்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் ப்யூச்சர்கேமிங் அண்ட் ஹோட்டல் சர்விசஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம் தான் இருக்கிறது. யார் இந்த மார்ட்டின் என்று தெரிய எளிமையாக சொன்னால்கருணாநிதி திரைக்கதை எழுதிய “இளைஞன்”, “பொன்னர்–சங்கர்” போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் மார்ட்டின் கடந்த தேர்தலில் […]