இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ பல்லாவரம்‌ துரைப்பாக்கம்‌ ரேடியல்‌ சாலை பல்லாவரம்‌ பெரிய ஏரி அருகில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு வண்ண பலூன்களை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ ச.அருண்ராஜ்‌ அவர்கள்‌ வானில்‌ பறக்கவிட்டார்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகும்னா அவர்கள்‌, காவல்துறை துணை ஆணையாளர்‌ அ.பவன்குமார்‌ அவர்கள்‌ உதவி ஆட்சியர்‌ (பயிற்சி) அனந்த்குமார்‌ சிங்‌ அவர்கள்‌ உட்பட பலர்‌ […]

திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பியை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், டி.டி.கே.நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், மாமன்ற உறுப்பினர் ச.இராஜேஸ்வரி. வட்ட செயலாளர் கு.வெங்கடேசன் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது புகார்

“வேட்பாளரின் செலவினக் கணக்கை மறுபரிசீலனை செய்வதற்கான வழிகளை கண்டறிய மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பிக்கிறார்” “நீலகிரி தொகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்” தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, நீலகிரி உதவி செலவின பார்வையாளர் கடிதம்

நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா – மதுரை. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்-கிருஷ்ணகிரி, சிதம்பரம், தஞ்சாவூர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி -நெல்லை, கோவை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – கோவை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – நாமக்கல், சேலம். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – தென்காசி, தூத்துக்குடி. அ,ம,மு.க. பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் – பெரியகுளம் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. – தூத்துக்குடி. […]

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் டி. ஆர்.பாலு அவர்களுக்கு

செம்பாக்கம் மண்டல குழு தலைவர் உயர்திரு ஜெயப்பிரதீப்சந்திரன் அவர்கள் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி கிரிஜாசந்திரன் திரு சி. ஜெகன் முன்னாள் உறுப்பினர் திரு பா. பிரதாப் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி பரிமளா சிட்டிபாபு மாநகர பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி மற்றும் திரளான பொதுமக்கள் காமராஜபுரம் பிரதான சாலையில் திரண்டு நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்து சிறப்பித்தனர்.

திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் காலை மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், TTK நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு, ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்,

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர், திரு.D.காமராஜ் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் திரு.S.சேகர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.R.S.சங்கர், மாமன்ற உறுப்பினர் திருமதி.ச.இராஜேஸ்வரி வட்ட செயலாளர் திரு.கு.வெங்கடேசன், மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ தாம்பரம்‌ ஜி.எஸ்‌.டி சாலை சரவணா வணிக வளாகத்தில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு. சஅருண்ராஜ்‌,இ.க.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌/வணிகவளாக ஊழியர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திருமதி ஆர்‌.அழகுமீனா,இ.க.ஆ.ப., […]

தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ தாம்பரம் ‌ ஜி.எஸ்‌.டி சாலை போத்தீஸ்‌ வணிக வளாகத்தில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ ,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு.ச.அருண்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ பொதுமக்களுக்கு வழங்கினார்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திருமதி ஆர்‌.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள்‌, உதவி ஆட்சியர்‌ […]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக தாம்பரம் மாநகராட்சி தாம்பரம் பல்லாவரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர். அழகுமீனா தலைமையில் சிட்லபாக்கத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் தங்களின் வாக்குகளை 100 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் நாட்டுப்புற கலைகளான தப்பாட்டம், தெருக்கூத்து மற்றும் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். கைகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி […]